நாங்கள் எங்கள் சொந்த நடவடிக்கiளாலும் முயற்சிகளாலும் நம்மை இரட்சிக்கமுடியாது. நாம் எப்படிச் சொர்க்கத்துக்குப் போக முடியும்? மனிதனுக்கு வேறே வாய்ப்பு இல்லையா? இந்தக் கேள்விக்கான பதில் இயேசுக்கிறிஸ்துவின் மரணத்தில் உள்ளது, அவர் மரிக்கும்போது என்ன நடந்து என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இயேசுக்கிறிஸ்துவின் மரணம் மனிதனுக்கு ஏன் முக்கியமானது?
கடவுள் நீதியும் பரிசுத்தமும் ஆனபடியால் அவர் நம்முடைய பாவங்களை தண்டிக்க வேண்டும்.
வேதம் இவ்வகையாகக் கூறுகிறது: தேவன் அன்பாகவே இருக்கிறார். (1.யோவான் 4:8) கடவுள் பாவத்தை வெறுக்கிறார் ஆனாலும் அவர் பாவிகளை நேசிக்கிறார் மற்றும் மன்னிக்க விரும்புகிறார். கடவுளின் நீதி நம்முடைய ஆன்மீக மற்றும் உடல் மரணத்தை எதிர்பார்க்கும்போது எப்படி நாம் மன்னிக்கப்படலாம்? கடவுளால் மாத்திரம் இந்தப்பிரச்சனையை தீர்க்க முடியும், அதை அவர் இயேசுக்கிறிஸ்து மூலமாய் செய்தார். பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1.யோவான் 4:14)
கடவுளுடைய குமாரன் மனிதனானார்.
இயேசுக்கிறிஸ்து முழுமையாய் மனிதனாய் இருந்தாலும் அவர் அதே சமயத்தில் கடவுளாயிருந்தார். ஏனென்றால் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. (கொலோசெயர் 2:9) இயேசுக்கிறிஸ்து விசேஷித்தமானவர். வேதம் இதை அடிக்கடி கூறுகிறது.
அவருடைய பிறப்பு விசேஷித்தமானது.
அவருக்கு மனுஷீகத் தந்தை இல்லை. பரிசுத்த ஆவியின் வல்லமை மூலமாக இயேசுக்கிறிஸ்து ஓரு கன்னியின் வயிற்றில் பிறந்தார். தேவதூதன் பிரதியுத்தரமாக பரிசுத்த ஆவி உன்மேல் வரும் உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும். (லூக்கா 1:35)
அவருடைய வார்த்தை விசேஷித்தமானது.
அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 4:32)
அவருடைய அதிசயங்கள் விசேஷித்தமானது.
மனிதர்கள் இயேசுக்கிறிஸ்துவின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும்போது அவர் தாம் செய்த அதிசயங்களை சுட்டிக்காட்டினார். குருடர்கள் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள். (மத்தேயு 11:5)
அவருடைய வாழ்க்கை விசேஷித்தமானது.
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். (எபிரெயர் 4:15) வேதத்தில் பார்க்கிறோம், இயேசுக்கிறிஸ்து மனிதனாக கடவுளுடைய கட்டளைகளை முழுமையாகக் கைக்கொண்டார். அதனால் அவர் பாவதிற்காக தண்டனையை அனுபவிக்கவேண்டிய அவசியமேயில்லை. இருப்பினும் அவரை தவறாகக் குற்றஞ்சாட்டி கைது செய்தார்கள். தவறான சாட்சிகளை காரணமாக வைத்து இயேசுக்கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் அவருடைய மரணம் தற்செயலான விபத்து அல்ல. அப்படியிருந்தும் தேவன் நிர்ணயித்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஓப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்து கொலை செய்தீர்கள். (அப்போஸ்தலர் 2:23) கடவுள் தன்னுடைய சொந்தக்குமாரனை ஓரு நோக்கத்துடன் அனுப்பினார். அவர் நம்முடைய பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொள்ளவே வந்தார். அப்படியே மனுஷகுமாரனும் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். (மத்தேயு 20:28)
அவருடைய மரணம் விசேஷித்தமானது மற்றும் நமது வாழ்க்கைக்கு முக்கியமானது.
இயேசுக்கிறிஸ்துவின் இரட்சிப்பின் வழியை சுருக்கமாக இந்த வேதவார்த்தை சொல்லியிருக்கிறது: தேவன் தம்முடைய ஓரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16)
நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.