நாம் தீராத மதபக்தியுள்ளவர்கள்.
அனைத்துக் கலாச்சாரங்களிலும் மனிதன் சமாதானமாயிருப்பதற்குக் கடவுளை ஆசையுடன் பல முயற்சிகளில் தேடுகிறான். அவன் அந்த ஆசையை உலகத்திலுள்ள மத வழிபாடுகளிலும் தேடுகிறான் குறிப்பாக படைத்தவரையல்ல தன்னால் படைக்கப்பட்டவைகளைப் பணிந்துகொள்ளுகிறான். அதுமாத்திரமல்ல சூரியன் சந்திரன் நட்சத்திரங்களையும் மிருகங்களையும் மனிதன் பணிந்துகொள்ளுகிறான். நான் பார்த்தேன் அவர்களில் அறிவிக்கிறவன் ஓருவனும் இல்லை. நான் கேட்குங்காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஓரு ஆலோசைனைக்காரனும் அவர்களில் இல்லை. இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா. அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே. (ஏசாயா 41:28-29)
மதபக்தி பாவத்தைப் போக்காது.
மதஜக்கியங்கள் மனிதன் கடவுளோடு கிட்டிசேர உதவிசெய்கிறது. ஆனால் எப்பொழுது மதங்கள் நம்முடைய சொந்த முயற்சியால் இரட்சிப்பை அடையவேண்டும் என்று எதிர்பார்க்கும்போது அது வீணாகிவிடும். நம்முடைய பக்திவிருத்தி பூரணமில்லாதது அது கடவுளுக்கு முன்பு நம்முடைய பக்திவிருத்தி முழுமையற்றது. கடவுள் முழுமையை எதிர்பார்க்கிறார். மனித முயற்சியாலும் பக்தியுள்ள செயல்களாலும் நம்முடைய பாவங்களைப் போக்க முடியாது.
நல்லசெயல்கள் நம்முடைய கெட்ட செயல்களைச் சரிபடுத்த முடியாது.
இயேசுக்கிறிஸ்துவின் இரட்சிப்பை விசுவாசிக்கும்போது நம்மால் கடவுளை கிட்டிச் சேரமுடியும். ஓருவரும் பெருமைபராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. (எபேசியர் 2:9)
பக்திவிருத்தி நம்முடைய பாவசுபாவத்தை மாற்றாது.
நம்முடைய பக்தி பெரிய பிரச்சனை அல்ல, ஆனால் அது ஓரு அறிகுறியாய் இருக்கிறது. நாம் ஆலயத்துக்குச் செல்வதோ அல்லது பக்தியுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது அது நம்மை ஓரு வகையில் சந்தோஷப்படுத்துகிறது. ஆனால் அது நம்முடைய அடிப்படை நிலையை மாற்ற முடியாது. அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறபிக்கத்தக்கவன் உண்டோ? ஓருவரும் இல்லை. (யோபு 14:4)
மிகவும் நல்லது - ஆனால் போதுமானது அல்ல.
ஆலயத்துக்குப்போவது அல்லது வேதம் வாசிப்பது தவறல்ல. வேதம் வாசிப்பது அல்லது ஆலயத்துக்குப்போவது தேவன்தாமே செய்யச்சொல்கிறார். ஆனால் இந்தப்பயிற்சிகள் நம்மை கிறிஸ்தவர்களாக மாற்றமுடியாது.
நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.