ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுளைக்குறித்த ஒரு கற்பனை இருக்கிறது. சிலர் அவரை நல்ல தாத்தாவாக தப்பைக் கண்டிக்காதவராக பார்க்கிறார்கள். சிலர் அவரை வானத்தின் நீதிபதியாகப் பார்க்கிறார்கள். மற்றும் சிலபேர்கள் கடவுளை இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட சக்தியாகப் பார்க்கிறார்கள். ஆனால் கடவுள் மாத்திரம்தான் தன்னைப்பற்றி சரியாக வெளிப்படுத்தமுடியும். பின் வரும் உதாரணங்கள் கடவுள் தம்மை எப்படி வேதத்தில் வெளிப்படுத்துகிறார் என்பதைக் காண்பிக்கிறது.
கடவுள் பெரியவராய் இருக்கிறார்.
கடவுளைப் பற்றின பல காரியங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். (யோபு 5:9) கடவுள் நம் சக்திக்கு அப்பாற்பட்டவர். மனிதனுடைய புத்தியாலும் யோசனை யாலும் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. இது நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடாது, நாம் கடவுளை முழுமையாக புரிந்துகொண்டால் அவர் கடவுளாய் இருக்க முடியாது. சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது: அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர். அவர் மகாநீதிபரர். அவர் ஒடுக்கமாட்டார். ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும். தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான். (யோபு 37:23-24)
கடவுள் ஒரு நபர்.
கடவுள் ஓரு பொருள், ஓரு சக்தி அல்லது ஓரு சிந்தனையல்ல. அவரால் சிந்திக்கவும், உணரவும் மற்றும் செயல்படுத்தவும் முடியும், இதுவெல்லாமே அவர் ஓரு நபர் என்பதைக் காண்பிக்கிறது. ஆனால் அவர் சாதாரண கடவுள் அல்லது ஓரு வகையான சூப்பர்மான் அல்ல. கர்த்தரோ மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன், நித்தியராஜா, அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரகத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். (எரேமியா 10:10)
கடவுள் நித்தியமானவர்.
அவருக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. வேதம் இவ் வகையாகக் கூறுகின்றது: பர்வதங்கள் தோன்றும் முன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்கு முன்னும், நீரே அனாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். (சங்கீதம் 90:2) கடவுள் இல்லாத ஓரு காலம் இருந்தது அல்ல, அது இருக்கப்போகிறதுமல்ல. அவர் தன்னை இவ் வகையாக அறிமுகப்படுத்துகிறார். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். (வெளி 1:8) அவர் என்றென்றைக்கும் மாறாதவர். இயேசுக்கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். (எபிரெயர் 13:8) கடவுள் எப்படி இருந்தாரோ அதேபோல் அவர் என்றென்றைக்கும் இருப்பார்.
கடவுள் சுயாதீனமானவர்.
ஓவ்வொரு உயிரினங்களும் மற்ற உயிரினங்களைச் சார்ந்திருக்கிறது, அவைகள் சூழ்நிலைகளையும் சார்ந்திருக்கிறது, குறிப்பாக அவைகள் கடவுளைச் சார்ந்திருக்கின்றன. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவ-pடைகொள்ளகிறதுமில்லை. (அப்போஸ்தலர் 17:25)
கடவுள் நீதி உள்ளவர்.
வேதம் கூறுகிறது: ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார். (ஏசாயா 30:18) கடவுள் படைப்பாளர் மாத்திரமல்ல, அவர் எங்கள் நீதிபதியாகவும் இருக்கிறார். நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். (சங்கீதம் 97:2) அவர் இன்னும் ஓன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.
கடவுள் பரிசுத்தமானவர்.
பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களை செய்கிறவருமாகிய உமக்கு ஓப்பானவர் யார்? (யாத்திராகமம் 15:11) கடவுளுடைய பரிசுத்தத்தை ஓருவரும் ஓப்பிட முடியாது. கர்த்தரைப்போல பரிசுத்தமுள்ளவர் இல்லை. உம்மையல்லாமல் வேறாருவரும் இல்லை. எங்கள் தேவனைப்போல ஓரு கன்மலையும் இல்லை. (1.சாமுவேல் 2:2) அவரில் ஓரு குறையும் ஓரு பலவீனமும் இல்லை. ஆதலால் கடவுள் நாமும் பரிசுத்தராயிருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. (1.பேதுரு 1:16)
கடவுள் எல்லாம் அறிந்தவராயிருக்கிறார்.
அவருடைய அறிவு முழுமையானது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஓன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமுமாயிருக்கிறது, அவருக்கே கணக்கு ஓப்புவிக்கவேண்டும். (எபிரெயர் 4:13) கடவுள் நம்முடைய இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்திருக்கிறார். அதுமாத்திரமல்ல அவர் நம்முடைய எண்ணங்களை, நாம் பேசும் வார்த்தைகளை நம்முடைய செயல்களை அறிந்திருக்கிறார். அவருடைய ஞானம் முழுமையானது ஆதலால் அவரை நாம் புரிந்து கொள்ளமுடியாது. தேவனுடய ஜசுவரியம், ஞானம்,அறிவு என்பவைகளில் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாத்தீர்ப்புக்கள் அளவிடப் படாதைவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! (ரோமர் 11:33)
கடவுள் வல்லமையுள்ளவர்.
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர். என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஓன்றுண்டோ (எரேமியா 32:27) ஆதலால் அவரால் எல்லாம் செய்யமுடியாது என்று அர்த்தமில்லை ஏனென்றால் அவர் பொய்சொல்லமாட்டார், அவர் துரோகமும் செய்யமாட்டார், அவர் பாவஞ்செய்யமாட்டார் தன்னை மறுதலிக்கவும் மாட்டார், அவரால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் அவரின் தன்மைக்கு ஏற்றபடி எல்லாம் செய்வார்.
கடவுள் அன்பாயிருக்கிறார்.
இது நிச்சயமாக மிகவும் சந்தோஷமான வெளிப்பாடு. தேவன் தம்முடைய ஓரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகமால் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத்தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16) அவர் தம் ஓரேபேறான குமாரன் மூலமாக உலகத்தை இரட்சித்தார். இதுதான் கடவுளின் வெளிப்படையான அன்பின் அடையாளம்.
நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.