இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி அநேகம் சொல்லலாம் குறிப்பாக அவர் செய்த அதிசயங்கள் அவருடைய முன் மாதிரியான வாழ்க்கை மிக மேன்மையானது. ஆனால் கடைசியில் எல்லா அறிக்கைகளும் அவருடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றிச் சொல்கிறது. வேதம் இரண்டு சம்பவத்துக்கும் ஏன் மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுக்கிறது? பதில்: அவர் நமக்காய் நம் பாவங்களுக்காய் அனைத்தையும் தன் மேல் ஏற்றுக்கொண்டு நம்மை இரட்சித்தார்.
இயேசு நமக்காய் மரித்தார்.
மனிதர்கள் கடவுளின் பரிசுத்தத்திற்கு முன்பாக குற்றவாளிகள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள். ஏனெனில் கடவுள் ஓவ்வொரு பாவத்துக்கும் சரியான தண்டனையைக் கொடுக்கிறார். ஆனால் அவர் நம்மைத் தண்டிக்கவில்லை எனெனில் வேதத்தில் அவர் ஓரு வழியைக்காண்பிக்கிறார். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோமர் 5:8) இந்த அற்புதமான மீட்புக்காகக் கடவுளின் குமாரன் தன்னை ஓப்புக்கொடுத்தார். அவர் நமக்காக நம் பாவங்களுக்காக மரித்தார். ஏனெனில் கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் பாவங்களினிமித்தம் ஓருதரம் பாடுபட்டார், அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். (1.பேதுரு 3:18) இதுவே கடவுளின் அன்பைக்காண்பிக்கிறது.
இயேசு நம் பாவங்களைச் சுமந்தார்.
இங்கே நாம் கடவுளின் பரிசுத்தத்தைப் பார்க்கிறோம். இயேசு மிகக்கொடுரமான வேதனைகளை அனுபவித்தார். அவர் சிலுவையில் தொங்கும்போது இவ்வாறு கூறினார்: என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர். (மாற்கு 15:34) அந்தக் கொடுரமான நேரத்தில் பிதா தம்முடைய குமாரனை விட்டுவிலகினார். இயேசுக்கிறிஸ்து பிரிவின் தண்டனையை அனுபவித்தார். அவர் தன்னை நமக்காய் ஓப்புக்கொடுக்கும்போது அவர் நம்முடைய பாங்களுக்காகப் பொறுப்பானார்.
இயேசு நம்முடைய இரட்சிப்புக்காக மரித்தார்.
கடவுள் இயேசுக்கிஸ்துவை மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்தார் அது மூலமாய் கடவுள் இயேசுவின் தியாகத்தை ஏற்றுக்கொண்டார். பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதெனன்று மரித்தேரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். (ரோமர் 1:5) அது மூலமாய் நரகத்துக்குப் போகவேண்டிய நம்மை மன்னிப்பின் அடிப்படையை வைத்து இரட்சித்தார்.
ஆனால் இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? கடவுளோடு நாம் எப்படி ஓன்றித்திருக்கமுடியும்? இயேசுக்கிறிஸ்து எப்படி நம்முடைய சொந்த இரட்சகராய் ஆகமுடியும்?
நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.