தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

மனிதன் சந்தித்த பெரிய விபரீதம் என்ன?

செய்திகளில் தொலைக்காட்சிகளில் வானொலிகளில் நமது உலகம் ஓழுங்கற்று போகிறது என்பதை தெரியப்படுத்துகின்றது. உலகத்தின் வன்முறை, அநீதி, குழப்பங்கள், தோல்விகளைப்பற்றி புகார் எழுப்பப்படுகிறது. நாம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். வேதம் கூறுகிறது: இப்படியாக, ஓரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவம்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. (ரோமர் 5:12)

Lektion5 Waldகடவுள் ஓரே ஓரு கட்டளை கொடுத்தார்.

நம்முடைய முன்னோர்கள் முதல் மனிதர்கள் (ஆதாமும் ஏவாளும்) முழு சுதந்தரத்தில் வாழ்ந்தார்கள். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:17)  ஆகவே கடவுள் ஆதாமும் ஏவாளும் இருந்த சுதந்தரத்துக்கு ஏற்றதாய் அவர்களைச் சோதித்தார். பிசாசு ஏவாளை வஞ்சித்து கடவுளுடைய கட்டளைக்கு எதிராகச் செயல்பட வைத்தான். அப்பொழுது ஸ்திரியானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். (ஆதியாகமம் 3:6)

அதே நேரத்தில் “பாவம் உலகத்தில் வந்தது”.

ஆதாமும் ஏவாளும் தெரிந்தும் கீழ்படியாமற்போனபடியால் அவர்கள் கடவுளிடம் இருந்து பிரிக்கப்பட்டார்கள். திடீரென்று கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ஓரு பெரிய சுவர் உருவாகினது. கடவுளை நேசிக்கிறதற்குப் பதிலாய் மனிதன் இப்போது அவரைப்பார்த்து அஞ்சினான். பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் அவர்கள் கேட்டார்கள் அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஓளித்துக்கொண்டார்கள். (ஆதியாகமம் 3:8)  சந்தோஷமாய் பாதுகாப்பாய் வாழவேண்டிய மனிதன் பாவத்தினால் பயத்தோடு வாழ்ந்தான்.

பாவத்தின் விளைவு பிரிவு.

கடவுள் இவ்வகையாகக் கூறினார், நாம் கீழ்ப்படியாமல் போகும்போது அவரோடு இருக்கிற தொடர்பு துண்டிக்கப்படுமென்று. அதேபோலத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நடந்தது. இந்தக் கொடுரமான சமயத்தில் நாம் கடவுளிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளோம் மாறாக நம்முடைய ஆத்துமா மரித்தது. அதின் இறுதிவிளைவாக சரீரமரணம் உலகத்தில் வந்தது. அதுமாத்திரமல்ல ஆதாமும் ஏவாளும் தம் பாவசுபாவத்தை நமக்கு தந்துவிட்டார்கள். இந்தநாள்வரை. இப்படியாக, ஓரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. (ரோமர் 5:12)  குறிப்பாக “எல்லாருக்கும்” என்ற வார்த்தையைக் கவனிக்கவேண்டும். அதில் நாமனைவரும் சேர்க்கப்பட்டிருக்கிறோம். நாம் எல்லோரும் பாவிகள் நாம் அனைவரும் ஓருநாள் மரிக்கவேண்டும். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1.யோவான்1:8)  நம்முடைய சொந்த வாழ்க்கையும் வேதத்தின் வசனங்களும் நாம் பாவிகள் என்பதை நிரூபிக்கிறது.

கடவுளை மகிழ்ச்சிப்படுத்துகிற வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா?

நாங்கள் நேர்மையான அன்பான சுயநலமில்லாதவர்களாக வாழ்கிறோமா? கடவுளிடம் இந்தக்கேள்விக்கு பதில் இருக்கிறது. நாமும் உண்மையாய்ச் சிந்தித்தால் நம்மாலும் இந்த கேள்விக்கு பதில் அளிக்கமுடியும். எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி. (ரோமர் 3:23)  எனெனில் நாங்கள் எடுத்த சொந்த முடிவாலும் தங்கள் நடக்கைகளினாலும் ஓவ்வொரு மனிதனும் தன்னுடைய பிறப்பிலிருந்து இயற்கையாகவே ஓரு பாவி. நாங்களும் இந்த உண்மையையும் அதின் விளைவுகளையும் புரிந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.