தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

மனிதனுக்கு கடவுளைப்பற்றிய தெளிவான அறிவுகள் தேவையாயிருக்கிறது.

யோபு என்ற மனிதனிடம் கடவுள் வேதத்தில் இவ்வகையான கேள்விகளைக் கேட்கிறார்: தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? (யோபு 11:7)  யோபுவால் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. நம்மால் தேவனை அறிந்து கொள்ள முடியாது ஆகையால் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்தவேண்டும்.

இயற்கையின் மூலமாக கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார்

பகலுக்கு பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. (சங்கீதம் 19:2)  விண்வெளியின் விரிவும் ஓழுங்கும் அழகும் படைத்த கடவுளின் தன்மையை வெளிப்படுத்துகிறது. பூமியின் படைப்பில் கடவுள் தம்முடைய வல்லமையையும் அவருடைய ஞானத்தையும் காண்பிக்கிறார். எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாகக்காணப்படும், ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. (ரோமர் 1:20)

கடவுள் மனிதனிடம் பேசுகிறார்

உறவாடுதல் என்பது அவருடைய வார்த்தையின் மூலமாக உயிர்பெறுகிறது. கடவுள் ஒரு சிலரோடு பேசினார். தீர்க்கதரிசனமானது ஓருகாலத்திலும் மனுஷனுடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். (2.பேதுரு 1:21)  வேதத்தில் மாத்திரம்தான் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் முழுமையாக நிறைவேறிவருகிறது. ஆதலால் எதுவும் தற்செயலாக இருக்கமுடியாது. கடவுள் வேதத்தில் எல்லாவற்றையும் ஒரு திட்டத்தோட செய்கிறார். அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப்படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2.தீமோத்தேயு 3:17)

Lektion2 Buchஎந்தப் புத்கத்திலும் வாழ்க்கையை மாற்றும் வல்லமை இருந்ததில்லை.

வேதத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு மனிதன் முன்பு இருந்த வாழ்க்கை மாற்றப்பட்டதை காணும்போது அதன் சிறப்பு தெரியவருகிறது. ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுகொள்ளாமல், தேவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது. (1.தெசலோனிக்கேயர் 2:13)  கோடிமக்கள் தனிப்பட்ட அனுபவத்தில் சாட்சி கூறுகிறார்கள். கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:8)

கடவுள் யாரென்று தெரியவிரும்பினால் அவருடைய வார்த்தையை நாம் வாசிக்கவேண்டும். தியானிக்கவும் அதில் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார் மாறாக தமது விருப்பங்களை பகிர்ந்துகொள்கிறார்.

நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.