தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

நீங்கள் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது ஓரு புதிய மனிதனானீர்கள். இந்த சம்பவத்தை ஓரு புதிய பிறப்பென்றும் கூறலாம். இந்தப் புதிய பிறப்பு மூலமாய் நமக்கும் கடவுளுக்கும் ஓரு புது உறவு உருவாகியது. வேதம் அதை நித்தியவாழ்வு என்று கூறுகிறது.

கடவுளுக்கும் நமக்கும் இடையில் சமாதானம்.

இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துமூலமாய்த் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். (ரோமர் 5:1)

இயேசுக்கிறிஸ்து மூலமாய் உங்களுடைய பாவங்கள் நீங்கியது.

அவரை விசுவாசிக்கிறவனெவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார்கள். (அப்போஸ்தலர் 10:43)

Lektion12 Haendeகடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)

உங்கள் நித்திய வாழ்வு நிச்சயம்.

ஆனபடியால் கிறிஸ்து இயசுவுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை. (ரோமர் 8:1)

கடவுள் பரிசுத்த ஆவியானவரின் ஆள்தத்துவத்தில் நம்முடைய வாழ்கையில் வந்தார்.

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்தியவசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபேசியர் 1:13)  உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இந்த நான்கு குறிப்புகள் அவசியம்.

ஜெபம் - நீங்கள் தினம் தோறும் கடவுளோடு பேசுங்கள்.

நாம் கடவுளோடு பேசும்போது அவர் சந்தோஷமடைகிறார். ஏனென்றால் ஓரு தந்தையாக அவர் உங்கள் வாழ்க்கையில் மேல் அக்கறை காட்டுகிறார். அவரோடு உங்கள் குடும்பத்தைப் பற்றி உங்கள் வேலையைப் பற்றி உங்கள் கவலைகளைப்பற்றி மற்றும் உங்கள் விருப்பங்களைப்பற்றி பேசலாம். அவருடைய இரக்கத்திற்காக நன்றி சொல்லுங்கள் நீங்கள் தப்பு செய்யும்போது அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். கடவுள் உங்கள் ஜெபத்தை நிச்சயம் கேட்பார் உங்களை மன்னிப்பார் மற்றும் உங்களுக்கு ஒத்தாசையாயிருப்பார். அவரிடம் நீங்கள் தினமும் மன்னிப்பு கேட்கலாம். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1.யோவான் 1:9)  ஓரு குறிப்பிட்ட நேரத்துக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஜெபத்தின் மூலமாய் அவரின் சத்தத்தைக்கேட்க முடியும். ஜெபத்தில் கடவுள் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.

வேதம் - கடவுளின் வார்த்தை நம் வாழ்வின் அடிப்படை.

தன்னுடையு விருப்பங்களை கடவுள் நமக்கு தெரிவிக்க விரும்புகிறார். கடவுளின் குரலை வேதம் வாசிக்கும் போது கேட்கலாம். வேதத்தின் மூலமாய் நாம் அவரை தெரிந்து கொள்ளவும் அவருடைய திட்டங்களைப் புரிந்து கொள்ளமுடியும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். (எபேசியர் 5:10)  பரிசுத்தஆவியானவர் நாம் வேதத்தை வாசிக்கும்போது நம்மை நடத்துவாராக.

Lektion12 Haende SWஜக்கியம் - உங்களுடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு ஒத்தாசை செய்யும் கிறிஸ்தவர்களைத் தேடுங்கள்.

நாம் தனியாக நம்முடைய வாழ்வில் போராடவேண்டும் என்ற அவசியமில்லை, அதைக் கடவுள் விரும்பவும் இல்லை, மற்றக் கிறிஸ்தவர்களிடம் நாம் பலதைக் கற்றுக்கொள்ளலாம். அவர்களோடு ஜெபம் செய்யலாம் வேதம் வாசிக்கலாம் ஓன்று சேர்ந்து சுவிசேஷம் சொல்லலாம். ஆதலால் தேவ ஆலயத்துக்கு போக வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் மற்றக் கிறிஸ்தவர்களின் ஜக்கியம் நமக்கு அவசியம். தேவ ஆலயத்தில் கடவுள் நமக்குத் தந்த தாலந்துகளை மற்றவர்களுக்காகப் பயன்படுத்த முடியும். சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் ஓருவருக்குகொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் புத்திசொல்லவேண்டும். (எபிரெயர் 10:25)

சேவை - மாறிய வாழ்க்கையின் மூலம் கிறிஸ்தவன் என்று காண்பியுங்கள்.

இப்பொழுதும் இஸ்ரவேலே நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளெல்லாம் நடந்து அவரிடத்தில் அன்பு கூர்ந்து உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து. (உபாகமம் 10:12)  நாம் கடவுளை மகிழ்விக்கும் ஓரு வாழ்க்கையை வாழ வேண்டும். இதுதான் நம்முடைய நோக்கமாயிருக்க வேண்டும். நாம் நம்முடைய தாலந்துகளைக் கடவுளின் சேவைக்கு ஓப்புவிக்கவேண்டும். ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கைகளாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபேசியர் 2:10)  கடவுள் நம்முடைய வாழ்க்கையில் செய்த பல நன்மைகளை உலகமெங்கும் கூறுவோமாக. இது நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை மாத்திரமல்ல, ஓரு மிக சந்தோஷமான அனுபவம். நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஓளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். (1.பேதுரு 2:9)

நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.