தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

நீங்கள் இரட்சிக்கப்படவேண்டுமென்று விரும்புகிறீர்களா?

கடவுளோடு சமாதானத்துடன் வாழவிரும்புகிறீர்களா? கடவுள் நமக்கு அவசியம் தேவையான இரட்சிப்பைக் காண்பிக்கிறார். நாம் அவருடைய இரட்சிப்பை ஏற்றுக்கொண்டு மனந்திரும்ப வேண்டும். தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும்... (அப்போஸ்தலர் 20:21)

மனந்திரும்புதல்.

மனந்திரும்புதல் என்பது ஓரு புதிய வாழ்க்கையின் அணுகுமுறை. மனப்பான்மையின் மாறுதல் முக்கியமானது. நாங்கள் பாவிகள் என்பதை ஓத்துக்கொள்ளவேண்டும். மற்றும் நாம் கடவுளுடைய அன்புக்கும் பரிசுத்தத்திற்கும் மாறாக நாம் நடந்து கொள்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இருதயத்திலும் ஓரு மாறுதல் காணப்படவேண்டும். நாம் செய்கிற பாவங்களைக்குறித்து ஓரு வெறுப்பும் ஓரு குற்ற உணர்ச்சியும் காணப்படவேண்டும். ஆனால் நாம் அத்தோடு நிறுத்தாமல் அந்தப் பாவத்தை விட்டு விலகவேண்டும் என்ற விருப்பம் நம்முடைய இருதயத்தில் இருக்கவேண்டும். நாம் ஓரு புதிய திசையை நோக்கி போகவேண்டும். கடவுள் மனிதனை மனந்திரும்பச் சொல்கிறார். அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பி குணப்படவும் மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். (அப்போஸ்தலர் 26:20)

Lektion11 Ampelமனந்திரும்புதல் என்றால்: ஓரு புதிய திசையை நோக்கி.

இருதயத்தின் ஆழத்திலிருந்து கடவுளுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ முயற்சிக்கவேண்டும். இதன்பொருள் என்னவென்றால், முழு இருதயத்திலிருந்து இயேசு கிறிஸ்து தான் உண்மையான கடவுள் என்பதை அறிக்கை செய்யவேண்டும். நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:16)  இயேசு கிறிஸ்து நமக்காய் ஜீவனைக்கொடுத்தவைரை நாம் முழுமையாக விசுவாசிக்க வேண்டும். அன்றியும் நாம் பெலனறற்றவர்களாயிருக்கும்போதே குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காய் மரித்தார். (ரோமர் 5:6)

மனந்திரும்போது எதிர்ப்புகள் வந்து நேரிடும்.

நம்முடைய பெருமையும் நம்முடைய பாவ சுபாவமும் பக்கிவிருத்தி மேலும் சொந்த முயற்சிகள் மேலும் நம்பிக்கை வைக்கத்தூண்டும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மேல் நம்முடைய நம்பிக்கையை மாத்திரம் வைக்க வேண்டும். எனென்றால் அவரால் மாத்திரம் தான் நம்மை இரட்சிக்க முடியும். மேலும் தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்கவல்லவராயும் இருக்கிறார். (எபிரெயர் 7:25)

விருப்பத்தைச் செயல்ப்படுத்தவேண்டும்.

இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிற விருப்பம் நமக்கு இருந்தால் நாம் அவரை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? அவரை நாம் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? நாம் கடவுள் முன்பு நாம் பாவிகளென்பதையும் நமக்கு இரட்சிப்பு அவசியம் என்பதையும் அறிக்கையிடவேண்டும். இயேசுக்கிறிஸ்து நம்மை இரட்சியும் என்று முழுஇருதயத்தோடு நாம் கேட்கவேண்டும். அவரை நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கும்போது அவர் நம்முடைய பாவங்களை மேற்கொள்ள உதவி செய்வார்.

ஒரு நேர்மையான ஜெபம் இதுபோன்று இருக்கும்:

கடவுளே நான் நீர் இல்லாமல் வாழ்ந்தேன் மற்றும் பாவத்தால் உம்மைவிட்டுப் பிரிந்து இருந்தேன். என்னுடைய பாவங்களை மன்னியும். இயேசுவே நீர் எனக்காய் மரித்து மீண்டும் உயிரோடு எழுந்ததிற்காக நன்றி. இன்றைய நாளில் இருந்து நீர் என்னுடைய வாழ்க்கையில் வரவேண்டும். உம்முடைய அன்புக்காக நன்றி. ஆமென்.

கடவுள் வாக்கு மாறாதவர்.

என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தேரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். (ரோமர் 10:9) யார் இயேசுக்கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு அவரைக் கடவுள் என்று அறிக்கையிடும்போது நித்திய வாழ்வைச் சுதந்தரித்துக்கொள்ளலாம்.

நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.