தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

அதிகமாக கேட்கப்படும் கேள்வி: கடவுள் இருக்கிறாரா?

இந்தக்கேள்வி பொதுவாக உலகத்தில் கேட்கப்படும் கேள்வி. கடவுள் இல்லையென்றால் அவரைத்தேடுவது பிரயோஜனமற்றது. வேதத்தில் இவ்விதமாக வாசிக்கிறோம்: விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம், ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரேயர் 11:6)  கடவுள் இருப்பதை விஞ்ஞானியரால் நிருபிக்க முடியாவிட்டாலும் எங்களுக்கு இருக்கின்ற ஞானம் அறிவு உணர்வின் மூலம் கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

Lektion1 Globusஇந்த உலகம்.

உலகம் தற்செயலாக உருவாகினதென்றால் அது புதிய கேள்விகளை உருவாக்கும் ஆனால் அதற்கு எங்களிடம் பதில் இல்லை. பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பரவலாக உள்ளது, ஆனால் நம்புவதற்கு கஷ்டமானது. எப்படி ஒன்றுமில்லாத இடத்தில் ஜீவராசிகள் உருவாகினது? இதற்கும் எங்களிடம் பதில் இல்லை அதனால் இது ஒரு கோட்பாடாக இருக்கிறது.

ஒரு நியாயமான விளக்கம் வேதத்தில் உள்ளது.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:1)  நமது உலகம் தற்செயலான ஒரு விளைவு அல்ல. இந்தப் படைப்புக்கு பின்னால் ஒரு பெரிய ஞானம் இருக்கவேண்டும் என்று மனிதர்கள் உணருகிறார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (எபிரெயர் 11:3)  இந்தப் படைப்பும் தொடக்கமும் முடிவும் கடவுளில் உள்ளது. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். (சங்கீதம் 33:9)

இயற்கையின் அற்புதமான வடிவமைப்பும் இயற்கை சட்டத்தின் ஒழுங்குகளும்

விண்வெளியிலிருந்து சிறிய உயிரினம் வரைக்கும் எல்லாம் ஒழுங்கும் கிரமமுமாக இருக்கிறது, ஆனால் அந்த ஒழுங்கும் தற்செயாலாக வந்தது அல்ல அதைப்போல இயற்கையின் சட்டங்களும் ஒருவர் இருக்கிறார் என்பதை நிருபிக்கிறது. உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. (அப்போஸ்தலர் 17:24)

மனிதன்தான் ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கு ஒரு மிகப்பெரிய அடையாளம்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். (ஆதியாகமம் 2:7)  மனிதன் மிருகங்களை விட மேலான தேவசாயலை உடையவன். மனிதனால் யோசிக்க, உணர அத்தோட விரும்பவும் முடியும். மனிதனுக்கு மனச்சாட்சி இருக்கிறது, அது மூலமாய் அவன் எதையும் நிதானிக்க முடியும். அத்தோடு அவன் நல்லதையும் கெட்டதையும் தெரிந்து கொள்ளமுடியும். மனதினால் சிந்திக்க முடியும் தேவன் இருக்கிறாரென்று இந்த ஆதங்கம் அவனுக்குள் இருக்கிறது. எங்கே இருந்து அவனுக்கு இந்த ஆதங்கம் வந்தது? இந்த ஆதங்கம் பரிமாணக்கோட்பாட்டால் வந்தது அல்ல, தற்செயலாகவும் வந்தது அல்ல. மனிதனும் தற்செயலாக உருவானவன் அல்ல. தாவீதுராஜா இவ்வகையாக வேதத்தில் கூறியிருக்கிறார்: நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத்துதிப்பேன். உமது கிரியைகள் அதிசயமாவைகள், அது என் ஆத்துமாவிற்கு நன்றாய்த் தெரியும். (சங்கீதம் 139:14)

நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.