இந்தக்கடிதத்தை வாசிக்குமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம். இதில் சொல்லப்பட்ட காரியங்கள் யாவும் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நீங்கள் எனக்கு மிக முக்கியமானவர்கள்

நான் உன்னை எல்லாரையும் விட புரிந்து இருக்கிறேன். உன்னுடைய விருப்பங்கள் ஏக்கங்கள் தேவைகள் எனக்கு நன்றாகவே தெரியும். (சங்கீதம் 139:1)  நீங்கள் எப்பொழுது தூங்குவீர்கள் அல்லது எழும்புவீர்கள் என்பது எனக்குத்தெரியும். நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். (சங்கீதம் 139:1)  நான் உங்கள் வழிகளையும் உங்கள் நோக்கங்களையும் அறிந்திருக்கிறேன். (சங்கீதம் 139:3)  உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. (மத்தேயு 10:29-31)

Guten Tagஉங்கள் பெற்றோர்கள் உங்களை எண்ணுவற்கு முன்பே, நான் உங்களை அறிந்திருக்கிறேன். (எரேமியா 1:5)  நான் உங்களை தாயின் கருவில் இருந்து தெரிந்துகொண்டேன். (சங்கீதம் 139:13)  நீ தற்செயலாக உருவாகினது அல்ல நான் உங்களை திட்டமிட்டு உருவாக்கினேன். உங்களுடைய எதிர்காலம் என்னுடைய கையிலிருக்கிறது. (சங்கீதம் 139:15-16)  நீங்கள் அற்புதமானவர்கள் (சங்கீதம் 139:14)  நீங்கள் கற்பத்தில் உற்பவித்தது முதல் உங்களை ஆதரித்தேன். (சங்கீதம் 71:6)  உன்னை நான் ஆசீர்வதிக்க விரும்புகிறேன் (யாக்கோபு 1:17)

என்னுடைய பிள்ளையாக மாற நான் உங்களை அழைக்கிறேன் (யோவான் 1:12)  நீங்கள் உங்கள் சொந்த வழியில் சென்று என்னை ஒதுக்கிவிட்டபோது, எங்கள் வழிகள் துண்டிக்கப்பட்டது (ஏசாயா 53:6)  அது அப்படியே இருக்கவேண்டியதில்லை. எனது குமாரன் இயேசு வழியாக இருக்கிறார், அவர் உங்களை மீட்டு என்னிடம் கூட்டிச் சேர்ப்பார் (யோவான்14:6)  இயேசுக்கிறிஸ்து மூலமாய் என்னுடைய அன்பு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்டது. (யோவான் 3:16)  உங்களை என்னோடு ஒப்புரவாக்குவதற்காக, இயேசு உங்களுடைய பிழையான வழிகளுக்காகவும் முடிவுகளுக்காகவும் சிலுவையில் மரித்தார் (2. கொரிந்தியர் 5:18-19,21)

நான் அவரை மரித்தோரிலிருந்து உயிர்பித்தேன். அவர் ஜீவிக்கிறார். (அப்போஸ்தலர் 10:40)  உங்களுடைய வாழ்க்கையை அவருடைய கைகளில் வைத்து ஜெயத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். (சங்கீதம் 37:4)  இந்த மன்னிப்பின் பரிசை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால், எங்கள் இடையில் எதுவும் பிரிவினை ஏற்படுத்தமாட்டாது. (ரோமர் 8:38-39)

கேள்வி என்னவென்றால்: நீங்கள் என் பிள்ளையாக இருக்க விரும்புகிறீர்களா? (யோவான் 1:12-13)  நான் உங்களுக்காய்க் காத்திருக்கிறேன். (லூக்கா 15:11-24)

உங்கள் அன்பின் கடவுள்

கடவுளைப்பற்றியும் உங்கள் வாழ்க்கையைப்பற்றியும் மேலும் தெரிந்து கொள்ளவிரும்பினால்: ”வாழ்க்கையைக் கண்டறிதல்” என்ற பக்கத்தில் தொடர்ந்து வாசிக்கலாம்.

Cookies make it easier for us to provide you with our services. With the usage of our services you permit us to use cookies.
Ok