மனிதர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுகிறார்கள்.

நாம் எதற்காக வாழ்கிறோம்? நாம் எங்கிருந்து வந்தோம்? நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நாம் இந்த உலகத்தில் பிரயோஜனமற்றவர்களாக வாழ வரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பரிசுத்தமும் ஞானமும் உள்ள கடவுள் நம்மை விசேஷித்த விதமாகப் படைத்தார் என்பதை வேதம் கூறுகிறது. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:27)  சூரியனையும், சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கிலும் நாம் சிறியதாயிருந்தாலும் கடவுள் நம்மை விசேஷித்த உயர்வான நிலையில் வைத்திருக்கிறார்.

நாம் மிருகங்களைப் பார்க்கிலும் சிறப்பானவர்கள்.

அதை நாம் எதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்றால், மனிதன் தன்னுடைய வாழ்வை தன் விருப்பத்தின்படி அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 1:28)  நாம் இந்த உலகத்தில் கடவுளுடைய சொந்த நிர்வாகிகள். கடவுள் எமது வாழ்க்கைக்கும் மற்ற உயிரினங்கள் மேலும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்.

Lektion4 Menschநமக்கு ஓரு விசேஷித்த மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாம் ஓவ்வொருவரும் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். கடவுள் நம்மை சிறியதாகிலும் குறைவாக படைக்கவில்லை. அதற்கு மேலாக நாம் அவரோடு ஜக்கியத்தில் வாழ நம்மை நியமித்திருக்கிறார். உதாரணமாக நம்மால் பிரார்த்தனை செய்ய முடியும் மாறாக அவரோடு இருக்கிற உறவை ஆழப்படுத்த முடியும். உலக வரலாற்றின் ஆரம்பத்தில் மனிதன் கடவுளோடு ஓரு முழுமையான ஜக்கியத்தில் இருந்தான்.

முந்தைய காலத்தில் „அடையாள நெருக்கடி“ இருக்கவில்லை.

மனிதன் தன் வாழ்க்கையைப் பார்த்து முழு திருப்தியும் சந்தோஷமுமாயிருந்தான். கடவுளும் அதில் முழு சந்தோஷமும் அடைந்திருந்தார். கடவுள் படைப்பை முடித்த பிறகு எல்லாம் நன்றாய் இருக்கிறதென்று சொன்னார் என்பதை வேதம் கூறுகிறது. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாய் இருந்தது. (ஆதியாகமம் 1:31)  முதல் மனிதன் ஏதேனில் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்தபோது அவன் சந்தோஷமாய் அவரோடு முழு ஜக்கியத்தோடு வாழ்ந்தான். மனிதனுக்கு தான் யாரென்பதையும் தான் ஏன் இந்த உலகத்தில் வாழ்கிறேன் என்பதையும் நன்றாய் புரிந்து கொண்டான். வாழ்க்கையைப்பார்த்து திருப்தியும் சந்தோஷமுமாயிருந்தான்.

இன்றைய சூழ்நிலை வேறாயிருக்கிறது. ஏன் அப்படி? என்ன நடந்தது?

நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Cookies make it easier for us to provide you with our services. With the usage of our services you permit us to use cookies.
Ok